Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ரவுடியான இளம் கதாநாயகன்.....

•On January 31, 2017
Nivin Pauly
Share
Nivin Pauly கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், நிவின் பாலி மற்றும் நட்ராஜ் சுப்ரமணியம் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படத்திற்கு 'ரிச்சி' என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. ரசிகர்களின் அமோக எதிர்பார்ப்பை பெற்று வரும் இந்த 'ரிச்சி' படத்தில் பிரகாஷ் ராஜ், 'யு டர்ன்' படப்புகழ் ஷ்ரதா ஸ்ரீனிவாஸ், ராஜ் பரத் மற்றும் 'சுட்டக்கதை' புகழ் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. "இந்த 'ரிச்சி' படத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரவுடி கதாபாத்திரத்தில் நிவின் பாலியும், படகுகளை சரி செய்யும் மெக்கானிக் கதாபாத்திரத்தில் நட்டியும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரையும் மையப்படுத்தி தான் எங்களின் 'ரிச்சி' படத்தின் கதை நகரும். பல எண்ணற்ற யோசனைகளுக்கு பிறகு, நாங்கள் இந்த படத்திற்கு 'ரிச்சி' என்று தலைப்பிட்டுள்ளோம். 'ரிச்சி' என்பது நிவின் பாலி நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர். தமிழில் முதல் முறையாக தன்னுடைய சொந்த குரலில் டப்பிங் செய்து இருக்கும் நிவின் பாலி, ஏறக்குறைய 75 சதவீத படப்பிடிப்பு காட்சிகளை நிறைவு செய்திருக்கிறார். வருகின்ற கோடை விடுமுறை நாட்களில் நாங்கள் 'ரிச்சி' படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம். படத்தின் முதல் காட்சி போஸ்டரையும், டைட்டில் டிசைனையும் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிட நாங்கள் திட்டமிட்டு இருக்கின்றோம்" என்று கூறுகிறார் 'ரிச்சி' படத்தின் இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.