Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ரம்ஜான் விருந்தாக "AAA" படம் வருகிறது....

•On May 12, 2017
AAA
Share
AAA சிம்பு என்னதான் "பீப்" சர்ச்சை மாட்டினாலும் மற்றும் பல பிரச்சனையில் மாட்டி இருந்தாலும். அவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதை நிருபிக்கும் விதமாக தனது பிறந்தாள் அன்று ரசிகர்கள் கொண்டாடினர். மற்றும் அவர் நடித்து வெளியாகிய அச்சம் என்பது மடமையடா நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தற்போது ரம்ஜான் பண்டிகை தினத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (AAA) வெளியாகும் என்று படக்குழு நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். சிம்பு நடிப்பில் உருவாகி வரும் AAA படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதன் முதல் பாகம் ஜுன் 23-ம் தேதி ரம்ஜான பண்டிகையை ஒட்டி வெளியிட உள்ளனர். படத்தின் ஆடியோ வெளியீடு விரைவில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். AAA படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு இறுதியில் அதாவது கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் சிம்பு அஸ்வின் தாத்தா, மதுரை மைக்கேல் ஆகிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்படத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.