Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ரம்ஜானில் வெளியாகுமா "விஸ்வரூபம் 2" பட டீசர்...

•On June 14, 2017
Vishwaroopam-2
Share
Vishwaroopam-2 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு 'விஸ்வரூபம்' வெளியான உடனே, 'விஸ்வரூபம் 2' படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தன. ஆனால், இப்படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் பல்வேறு காரணங்களால் முடங்கியது. அதன் பின்னர் கமல்ஹாசன் நடித்த 'உத்தம வில்லன்','தூங்காவனம்','பாபநாசம்' உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியான நிலையில், 'விஸ்வரூபம் 2' எப்போது வெளியாகும் என்ற கேள்வி எல்லா ரசிகர் மனதிலும் எழுந்தது. இந்நிலையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் இருந்த 'விஸ்வரூபம் 2' திரைப்படத்தின் உரிமத்தை தற்போது கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனமே கைப்பற்றியிருப்பதால், திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் துவங்கப்பட்டு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான 'விஸ்வரூபம் 2' திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ள நிலையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி வருகிற ஜூன் 23ஆம் தேதி 'விஸ்வரூபம் 2' டீசரை வெளியிட கமல்ஹாசன் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இப்படம் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.