ரஜினியின் "கபாலி" தணிக்கை செய்யப்பட்டது..

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா மற்றும் பலர் நடித்து, சந்தோஷ்நாராயனான் இசையமைத்து 'அட்டகத்தி'இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் "கபாலி". இப்படத்தை V கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி S தாணு தயாரித்துள்ளார்.
இத்திரைப்படம் இன்னும் தணிக்கை செய்யப்படவில்லை, பல பிரச்சனைகள் என பல வகை புரலிகள் தினம்தோறும் கிளம்பியவண்ணம் இருந்தது. இந்த சூழலில் அணைத்து புரலிகளுக்கும் முற்றுப்புள்ளி வகுக்கும் விதமாக இன்று "கபாலி" திரைப்படத்தின் தணிக்கை சென்னையில் உள்ள ஒரு ப்ரீவியூ திரையரங்கில் நடைபெற்றது.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு 'U' சான்றிதழ் வழங்கியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு தெரிவித்துள்ளார். "கபாலி" திரைப்படம் 152 நிமிடங்கள் ஓடக்கூடிய படம் என சொல்லப்படுகிறது.
"கபாலி" திரைப்படம் இந்த மாதம் 22ம் தேதி உலகெங்கும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
