ரஜினியிடம் ஆலோசனை கேட்ட கேப்டன்..!

ஒரு சமயம் ரஜினி ஒரு விழா மேடையில் பேசும்போது “அரசியல், சினிமா என இரட்டைக்குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்கிறார் விஜி(கேப்டன் தான்)” என்று கேப்டனை பகிரங்கமாகவே பாராட்டினார்.. அதுதான் ரஜினி.. அந்த அளவுக்கு கேப்டனுக்கும் சூப்பர்ஸ்டாருக்கும் நல்ல புரிந்துணர்வு உண்டு..
சமீபத்தில் கேப்டன் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று திரும்பினார் என்பது தெரியும். ஆனால் சிங்கப்பூர் செல்லும் முன்னரே அவர் போன் செய்தது ரஜினிக்குத்தான். இருவரும் மனம் விட்டு பேசியபோது கேப்டன் தன உடல்நிலை குறித்தும் அதற்கு சிகிச்சை பெற சிங்கப்பூர் செல்வது குறித்தும் ரஜினியிடம் பகிர்ந்துகொண்டார்.
ரஜினி ஏற்கன்னவே சிங்கப்பூரில் தங்கி அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டவர் தான். கேப்டன் ரஜினிக்கே நேரடியாக போன் போட்டது அதனால் தான். ரஜினியும் அங்கு தனக்கு தரப்பட்ட ட்ரீட்மென்ட் குறித்து சிலாகித்து பேசியதோடு அங்கேயே கேப்டனையும் ட்ரீட்மென்ட் எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
அதேபோல சிங்கப்பூர் சென்று கேப்டன் மருத்துவமனையில் அட்மிட் ஆனதும் அங்கிருந்த டாக்டர்களுக்கும், தனக்கு சிகிச்சை அளிக்கும்போது உடன் உதவியாக இருந்தவர்களுக்கும் போன் செய்து கேப்டனை நல்லபடியாக கவனித்துக்கொள்ளுமாறும் சொல்லியிருக்கிறார்.
மேலும் ‘லிங்கா’ படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் கேப்டன் சென்னை திரும்பும் வரை அவ்வப்போது விஜயகாந்த்தின் உடல்நலம் குறித்து விசாரித்தும் வந்திருக்கிறார். இப்போது கேப்டன் நல்லபடியாக சென்னை திரும்பியது ரஜினிக்கு பரம திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளித்திருக்கிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
