ரஜினிக்கு பிறகு தனுஷின் விஐபி-2 மலேசியாவில் வெளியிடு!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இதுவரை வேறு எந்த இந்திய நடிகரின் திரைப்படமும் மலேசியாவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், விஐபி-2 புது சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்பாக ரஜினிகாந்தின் 'கபாலி' 480 தியேட்டர்களில் வெளியானது. விஐபி படத்தின் இரண்டாம் பாகமான இதனை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.
விஐபி-2 மலேசியாவில் மட்டும் 550 திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகத்தில் 450-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
