ரகுமான் நடிப்பில் உருவாகும் 'பகடி ஆட்டம்'

ரகுமான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'துருவங்கள் பதினாறு' படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ரகுமானின் நடிப்பும் ரசிகர்களிடையே நல்ல பாராட்டைப்பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து 'பகடி ஆட்டம்' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
பெண்களுக்கு விழிப்புணர்வு கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ராம் கே.சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை குமார் டி.எஸ், கே.ராமராஜ், டி.சுபாஷ் சந்திரபோஸ், ஏ.குணசேகர் ஆகியோர் தயாரித்து வருகிறார்கள். V.T நிறுவனம் இப்படத்தை உலகமெங்கும் வெளியிட இருக்கிறது.
இதில் ரகுமான் துப்பறியும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போதுள்ள சூழ்நிலையில், சமூக வலைதளங்களில் மக்கள் அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இந்த சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை துப்பறிந்து வெளிச்சத்துக் கொண்டுவரும் கதாபாத்திரத்தில் ரகுமான் நடிக்கிறார்.
இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை நாளை மாலை 7 மணியளவில் இயக்குனர் பாண்டிராஜ் வெளியிடுகிறார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
