Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

யார் நினைத்தாலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..!

•On June 4, 2018
7db9448f4fade27c0b8cf2b159c8435f
Share

இனிமேல் யார் நினைத்தாலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஆனாலும், நீதிமன்றத்தை நாடி இந்த ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பிருக்கிறது என செய்திகள் வெளிவந்தன.

ஒருபுறம், சட்டசபையில் திமுக இந்த விவகாரத்தை தீவிரமாக கையிலெடுத்தது. இந்நிலையில் இன்றைய சட்டசபை விவாதத்தில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த விவாகரம் குறித்து கேள்வி எழுப்பினார். நீதிமன்றத்தை நாடி ஆலை திறக்கப்பட வாய்ப்பிருப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் "ஆலை முழுவதுமாக மூடப்பட்டு விட்டது. அந்த ஆலைக்கு வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இனிமேல் யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது.ஆலை மீண்டும் இயங்காத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது" என விளக்கம் அளித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.