யார் அந்த ராஸ்கல்?

அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல்.
இப்படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடிக்கின்றனர். தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி நைனிகா நடிக்கிறார். பாலிவுட் நடிகர் ஆஃப்தாப்ஷிவ்தசானி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நிகிஷா பட்டேல் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.
தற்போது சென்னையில் இறுதிகட்ட படபிடிப்பு நடந்து வரும் நிலையில், படத்தின் ஒரு பாடல் காட்சி படமாக்க மாலத்தீவில் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டுள்ளது. அத்துடன் படப்பிடிப்பு நிறைவடைகிறது.
இப் படத்திற்கு இயக்கம் சித்திக், நடன இயக்குநராக பிருந்தா, இசையமப்பளராக அம்ரேஷ், ஒளிப்பதிவளராக விஜய் உலகநாதன் இப் படத்தில் பணியாற்றுகின்றனர்.
மீதமுள்ள பாடல் காட்சிக்காக படக்குழுவினர் வருகின்ற 27-ஆம் தேதி மாலத்தீவிற்கு செல்கின்றனர்.
பாஸ்கர் ஒரு ராஸ்கல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் டைட்டில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', நாயகனோ அரவிந்த்சாமி. அரவிந்த்சாமி தான் அந்த பாஸ்கரா? அல்லது வேறு யாராவது அந்த ராஸ்கலா??Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postதனி ஒருவனாக எடுத்த படம்!
