“மோசமான ஹோட்டலை ஒதுக்கிவிட்டார்களே” – சோனாக்ஷி சின்ஹா ட்வீட்டால் பரபரப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக ‘லிங்கா’ படத்தில் நடித்து வருகிறார் சோனாக்ஷி சின்ஹா. இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலம் சிமோகா அருகில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சி அருகே நடைபெற்று வருகிறது. இதன் அருகில் உள்ள ஹோட்டல்களில் தான் படப்பிடிப்பு குழுவினர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதில் சோனாக்ஷி சின்ஹாவுக்கு வசதி குறைவான ரூமை ஒதுக்கியதாக அவர் தனது டிவிட்டரில் செய்தி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ட்வீட்டில், “கடவுளே.. நான் என்ன செய்தேன் என்று இப்படி ஒரு மோசமான ஹோட்டலை கண்டுபிடித்து அதில் என்னை தங்க வைத்தாய்?”.என குறிப்பிட்டிருந்தாராம்.
இதுபற்றி இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷிடம் கேட்டபோது, “நாங்கள் படப்பிடிப்பு தளத்துக்கு அருகில் இருந்த நல்ல ஹோட்டலையே தேர்வு செய்து கொடுத்திருக்கிறோம். சோனாக்ஷி சின்ஹாவுக்கும் இதில் மகிழ்ச்சிதான். ஆனால் நீங்கள் சொல்கிறபடி அவர் டிவிட்டரில் செய்தி போட்டாரா என்பது எனக்கு தெரியாது” என்று சொல்லியுள்ளாராம்.
ஆனால் ஆச்சர்யமான விஷயமாக இந்த ட்வீட் கொஞ்ச நேரத்திலேயே சோனாக்ஷி சின்ஹாவால் அழிக்கப்பட்டு விட்டதாம். ஆனால் அதை ஒரு பத்திரிகை சமயோசிதமாக அப்படியே காபி செய்து சாட்சிக்காக வைத்துக்கொண்டுதான் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்களாம்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
