Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மோகன்லால் நடிப்பில் வரவிருக்கும் 'வில்லன்' ஜூலை-21ல் ரிலீஸ் ஆகிறது...

•On May 25, 2017
mohan
Share
mohan நம்ம மோகன்லால் மலையாளத்தில் உள்ள நடிகர்களுள் முன்னணி நடிகர் இவருக்கு மலையாளத்தில் மட்டும் ரசிகர் என்று இல்லை இவருக்கு தமிழிலும் பல ரசிகர்கள் உண்டு. இவர் நடித்த புலிமுருகன் இப்பொழுது தமிழிலும் வரவிருக்கிறது. இந்நிலையில் மலையாளத்தில் மிகவும் பரபரப்பாக தயாராகி வருகிறது மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் 'வில்லன்' படம். மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர் என்பதால் இந்தப்படத்தை எப்படியும் ஹிட்டாகி விடவேண்டும் என ராப்பகல் பாராமல் உழைத்து வருகிறார் படத்தின் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன். ஏற்கனவே மோகன்லால் நடித்துள்ள மூன்று படங்களை இயக்கியுள்ள இவர், இந்தப்படம் முடிந்ததும் கூட, ஒரு சிறிய இடைவெளிவிட்டு அடுத்ததாகவும் மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்கும் அளவுக்கு மோகன்லாலின் தீவிர பக்தர். தற்போது 'வில்லன்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதில் விஷால், ஹன்ஷிகா உள்ளிட்டோரின் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டனவாம். தற்போது வெளிநாட்டு சுற்றுலாவில் இருக்கும் மோகன்லால், கேரளா திரும்பியதும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஒரே தம்மில் நடைபெற இருக்கிறதாம். முதலில் இந்தப்படத்தை ஜூலை-28 ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தவர்கள், தற்போது ஒருவாரம் முன்னதாக ஜூலை-21ஆம் தேதியே படத்தை ரிலீஸ் செய்ய தேதி குறித்துவிட்டார்கள்

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.