மோகன்லாலுக்கு பரிசாக கிடைத்த ‘குரங்கு பேனா’..!

குரங்கு பேனா பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? வாய்ப்பு குறைவுதான்.. கேள்விப்படாதவர்கள் கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான ‘பிலிப்ஸ் அன்ட் தி மங்கி பென்’ படத்தை பாருங்கள். ஜெயசூர்யா, ரம்யா நம்பீசன் நடித்திருந்தாலும் அதில் ஹீரோ என்றால் அந்தப்படத்தில் ரயான் பிலிப்சாக நடித்த சனூப் சந்தோஷும் அவன் கூடவே படம் முழுவதும் வரும் 'மங்கி பென்’ என்கிற குரங்கு மோம் கொண்ட பேனாவும் தான்..
படத்தில் அது வெறும் சாதாரண பேனா அல்ல.. ஐந்தாம் வகுப்பு படிக்கும் பிலிப்சின் ஹோம் வொர்க்குகளை அவன் தூங்கி எழுந்திருப்பதற்குள் அவனது நோட்டில் எழுதி வைத்துவிடும். இதனால் ஆசிரியரிடம அடிவாங்குவதில் இருந்து அவனை தப்பிக்க வைக்கும். ஒரு கட்டத்தில் அவனை நெறிப்படுத்தி படிப்பில் மட்டுமல்லாமல் பள்ளியிலும் நல்ல மாணவனாக மாற்றும்.
இப்படிப்பட்ட அந்த குரங்கு பேனாவைத்தான் தற்போது மோகன்லாலுக்கு பரிசாக அளித்திருக்கின்றனர் ‘பிலிப்ஸ் அன்ட் தி மங்கி பென்’ படக்குழுவினர். காரணம் இந்தப்படத்தை தயாரித்ததோடு இதில் கணக்கு வாத்தியாராகவும் அற்புதமாக நடித்த விஜயபாபு மோகன்லாலுடன் இணைந்து ‘மிஸ்டர் பிராடு’ படத்தில் நடித்தபோது அவரது அன்புக்கு பாத்திரமானவர்.
தற்போது ‘பெருச்சாழி’ என்கிற படத்தில் நடித்துவரும் மோகன்லாலுக்கு அந்தப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு அன்று இந்த பேனாவை பரிசாக கொடுப்பதுதான் சரியாக இருக்கும் என முடிவெடுத்து அவரிடம் நேரில் சென்று கொடுத்து அசத்தியிருக்கின்றனர் ‘பிலிப்ஸ் அன்ட் தி மங்கி பென்’ டீம்.. இப்போது அந்தப்பேனா மோகன்லாலின் ஆர்ட் கேலரியை அலங்கரிக்கும் முக்கிய பொருளாக மாறியிருக்கிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
