மொத்தப்படமும் 3 மணி 2 நிமிடங்கள்- திலீப்-ன்"கம்மர சம்பவம்"

திலீப் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள படம் தான் 'கம்மார சம்பவம்'.
இந்த படத்தை புதுமுக இயக்குனர் மற்றும் விளம்பர பட இயக்குனரான ராதிஷ் அம்பத் இயக்கி வருகிறார். இந்த படம் நடிகர் சித்தார்த் மலையாள திரையுலகில் அறிமுகமாகும் முதல் படமாகும். இந்த படத்தில் சித்தார்த் மற்றும் திலீப் ஆகியோருடன் இணைந்து பாபி சிம்ஹா, நமீதா பிரமோத், சுவேதா மேனன், முரளி கோபி, அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரித்து வருகிறார்.
இந்த படத்திற்கு நடிகர் மற்றும் கதை எழுத்தாளரான முரளி கோபி கதை எழுதி அவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சுனில் கேஎஸ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள சுரேஷ் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தை கிராண்ட் ப்ரொடக்சன் நிறுவனம் வெளியிட உள்ளது
படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில் மொத்தப்படமும் 3 மணி 2 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாக்கி இருக்கிறதாம்.கடந்த பல வருடங்களில் 3 மணி நேரம் ஓடும் அளவில் வெளியான படங்கள் மிகவும் சொற்பமே.. விரல்விட்டு எண்ணிவிடலாம்.
அதிலும் திலீப் படங்கள் இவ்வளவு நேரம் ஓடும் விதமாக இதுவரை உருவானதும் இல்லையாம். இதற்குமுன் வெளியான திலீப்பின் 'ராம்லீலா' படம் தந்த வெற்றியும் உற்சாகமும் தான் ரசிகர்கள் மீதுள்ள நம்பிக்கையால் 3 மணி நேர படமாக இதை வெளியிட தூண்டியுள்ளதாம்.
 ,Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
