Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மே 9 "காலா"படத்தின் இசை வெளியீடு..!

•On May 4, 2018
Kaala_Audio Date Ad_Tamil
Share
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தவுள்ள 'காலா 'படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மே 9 ஆம் தேதி  சென்னையில் உள்ள YMCA மைதானத்தில் ( நந்தனம் ) பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
காலா படத்தினை (நடிகர்/தயாரிப்பாளர்) தனுஷின் 'வுண்டர்பார் பிலிம்ஸ்' தயாரித்துள்ளது. கபாலி மற்றும் மெட்ராஸ் பட புகழ் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
இந்த இசைவெளியீட்டு விழாவானது நேரலையாக டுவிட்டர், பேஸ்புக், யூடியூபில் ஒளிபரப்பப்பட உள்ளது.
சந்தோஷ் நாராயணன் தனது  (Dopeadelicz &, RAP குழு)
இசைக்குழுவினருடன் இணைந்து  காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார்.
வுண்டர்பார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் அதன் டிஜிட்டல் பங்குதாரரான டிவோ (DIVO) நிறுவனமும் இணைந்து காலா படத்தின் பாடல்களையும்,இசைநிகழ்ச்சியினை நேரடியாக இணையதளங்களில் வெளியிட உள்ளனர்.
இசை வெளியீட்டு விழாவின் நேரலையை கீழ்கண்ட லிங்க்-களில் காணலாம்

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.