மேக்கப் போட மட்டுமே 4000 மணி நேரம்.. அதிரவைக்கும் ‘ஐ’..!

பிரமாண்டம் என்றால் ஷங்கர்.. ஷங்கர் என்றால் பிரமாண்டம்.. தற்போது விக்ரமை வைத்து அவர் உருவாக்கியுள்ள ‘ஐ’ படத்தில் விக்ரம் அழகான வாலிபனாக, ஓநாய் மனிதனாக, விசித்திர மனிதனாக என மூன்றுவிதமான ரோல்களில் நடிக்கிறார்..
இந்தப்படத்தின் மேக்கப்பிற்காக செலவிடப்பட்ட நேரமே கிட்டத்தட்ட 4000 நிமிடங்களை தொடுகிறதாம். சில மேக்கப்புகளை போடவே நான்கு மணி நேரம் ஆகி விடுமாம். ஆனால் அந்த மேக்கப்பில் இரண்டு மணி நேரம் நடித்ததும் மீண்டும் மேக்கப்பை கலைத்துவிட்டு ஷூட்டிங்கிற்கு பேக்கப் சொல்லிவிடுவார்களாம்.
இதற்கு முன்னால் கமல் பத்து வேடங்களில் நடித்த ‘தசாவதாரம்’ படத்தில் தான் மேக்கப்பிற்காக அதிக நேரம் செலவிடப்பட்டது குறிபிடத்தக்கது. இப்போது விக்ரம் அந்த அளவுக்கு மெனக்கெட்டிருக்கிறார். அவரது உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும் என நம்புவோம்..
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
