Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மெரீனாவில் இருந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை அகற்றம்!

•On August 3, 2017
Sivaji_Ganesan
Share
Sivaji_Ganesan நடிகர் சிவாஜி கணேசனின் சிலை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நிறுவப்பட்டு இருந்தது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, சிவாஜி கணேசன் சிலையை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு 1 மணியளவில் சிவாஜி கணேசன் சிலையை அகற்றும் பணி தொடங்கியது. அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். முதல் கட்டமாக சிலையை சுற்றிலும் இரும்பு தடுப்பு வேலிகளை போலீசார் அமைத்தனர். நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை அதிகாலையில் பத்திரமாக அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட இந்த சிலையானது அடையாறில் அமைக்கப்பட்டு வரும் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் வைக்கப்பட உள்ளது. மணிமண்டபத்தை விரைவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.