Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மெகா சண்டைக்காட்சியில் நடிகர் "பிரபாஸ்"-அபு தாபியில் "சாஹூ"..!

•On June 15, 2018
7101_Prabhas_1
Share
UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரிக்க சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் - ஸ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படம் "சாஹூ".
ரசிகர்கள் இதுவரை காணாத வித்தியாசம் கொண்ட மாஸ் நிறைந்த வேடத்தில் பிரபாஸ் "சாஹூ" படத்தில் நடித்துள்ளார். நடிகர் அருண் விஜய் முக்கிய வேடத்தில் வில்லனாக நடிக்கின்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அபு தாபியில் நடந்து வருகிறது. அபு தாபி அரசரின் சிறப்பு அனுமதி பெற்று சாஹூ படத்திற்காக உருவாகும் பிரம்மாண்டமான ஆக்ரோஷமும் அதிரடியும் நிறைந்த ஒரு மெகா சண்டைக்காட்சியில் பிரபாஸ் நடித்து வருகிறார்.
பிரபாஸ் தனது படங்களில் தனது அர்ப்பணிப்புக்காக அறியப்பட்டவர். ஒரே ஷெட்யுலாக 20 நாட்கள் எடுக்கப்படும் இந்த சண்டைக்காட்சிக்காக பாலைவனத்தில் சுட்டெரிக்கும் சூரியனின் வெட்ப்பத்தையும் பொருட்படுத்தாமல் ஒளிப்பதிவாளர் மதியின் ஆறு கேமரா செட்டப்பில், கிட்டத்தட்ட 37 கார்களையும் 5 ட்ரக்குகளையும் பிரபாஸ் அடித்து நொருக்கும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்துறையின் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களான சாபு சிரில் கலை இயக்குனராக, ஒளிப்பதிவை மதி ஏற்றுக்கொள்ள, திரைப்படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது "சாஹூ".

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.