Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மூணு மணி நேரத்தில போற எடத்துக்கு 15 நிமிசத்துல போகணுமா இதோ பறக்கும் டாக்சி !

•On August 5, 2017
helikaptar
Share
helikaptar பெங்களூருவில் கெம்பகவுடா சர்வதேச விமானநிலையத்தில் இருந்து எலெக்ட்ரானிக்சிட்டி வரை இந்த ஹெலிகாப்டர் டாக்சி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய விமானப்போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா இந்த சேவையை அறிமுகம் செய்து வைத்தாலும், முறைப்படி போக்குவரத்து தொடங்க இன்னும் 3 மாதங்கள் ஆகும். தும்பி ஏவியேஷன் விமானப்போக்குவரத்து நிறுவனம் மூலம் இந்த ஹலிகாப்டர் சேவை இயக்கப்பட உள்ளது. பெல்412 ரக ஹெலிகாப்டர்கள், இரு பைலட்கள் செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டரில் 13 பயணிகள் வரை பயணிக்கலாம். மற்றொரு பெல் 407 ஹெலிகாப்டரில், 5 பயணிகள் வரை பயணிக்கலாம். இது குறித்து மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா பேசுகையில், “ இந்த ஹெலிகாப்டர் சேவை என்பது, ஒரு ஆடம்பரமான டாக்சி போன்றது. இன்னும் கட்டணம் முடிவாகவில்லை. குறைந்தபட்சம் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரை கட்டணம் இருக்கும்’’ எனத் தெரிவித்தார். இந்த கெம்பகவுடா சர்வதேச விமானநிலையத்துக்கு நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் பயணிள் வந்து செல்கிறார்கள். இதில், 100 பயணிகள் ஹெலிடாக்சியை பயன்படுத்தினால், இயக்கும் செலவு குறையும் எனத் தெரிகிறது. கெம்பகவுடா விமானநிலையத்தில் இருந்து, எலெக்ட்ரானிக் சிட்டி வரை இயக்கப்பட உள்ள இந்த ஹெலிகாப்டர் 15 நிமிடங்களில் எலெக்ட்ரானிக் சிட்டியை சென்றடையும். இதே சாலை மார்க்கமாக சென்றால், குறைந்தபட்சம் போக்குவரத்து நெரிசலைக் கடக்க 3 மணிநேரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.