மூடர்கூடம் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி..

மூடர்கூடம் படத்தை இயக்கியவர் நவீன். அதன் பிறகு சமுத்திரகனி நடிக்கும் கொளஞ்சி என்ற படத்தை தயாரிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் படம் இயக்குகிறார்.இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் உள்ளிட்ட நடிகர், நடிகைள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.
படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. அம்மா கிரியேஷன் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். சிவா தயாரிக்கும் 23வது படம் இது. படப்பிடிப்புகள் ஜூலை மாதம் தொடங்குகிறது. விஜய் ஆண்டனி தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ள காளி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். திமிருபிடிச்சவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
