மூக்குத்தி அம்மன் படம் வேற லெவலுக்கு ரீச்சாகும் : புகழ்ந்து தள்ளிய ஆர். ஜே. பாலாஜி..

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக உயர்ந்து கொண்டிருப்பவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா . சரத் குமார் நடித்த ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது ஆர். ஜே. பாலாஜியுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்கிறார்.
அறிமுக இயக்குனரான என். ஜே. சரவணனுடன் இணைந்து உதவி இயக்குநராக பணியாற்றுகிறார் ஆர். ஜே. பாலாஜி. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஊர்வசி, மௌலி, ஸ்மிருதி வெங்கட் ஆகியோரும், வில்லனாக விசாரணை படத்தில் நடித்த அஜய் கோஷூம் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி நயனதாரா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
பக்தி படமாக உருவாகும் இந்த படத்தின் கதையை ஆர். ஜே. பாலாஜி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த ஆர். ஜே. பாலாஜி தனது குடும்பத்தை காப்பாற்ற போராடி வருகிறார். அந்த குடும்பத்தில் மூக்குத்தி அம்மன் நுழையும் போது அங்கு என்னென்ன நடக்கும் என்பது தான் படத்தின் கதையாம்.
சமீபத்தில் கூட இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படாது என்றும், திரையரங்குகளில் தான் முதலில் வெளியிடப்படும் என்று ஆர். ஜே. பாலாஜி கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்தாண்டு வெளியான அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கண்டென்கள் எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்ந்ததோ , அதே போன்று நயன்தாரா போன்று ஸ்டார் வேல்யூ கொண்ட ஒருத்தர் நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் கண்டென்டும் வேற லெவலுக்கு ரீச்சாகும் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.


Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
