மு.க.ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி: பஜ்ஜி கடைக்காறார்...

சென்னை மெரினா கடற்கரையில் பஜ்ஜி கடை வைத்திருக்கும் அஜித்குமார் என்பவரது திருமணத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று அவருக்கு வாழ்த்து கூறியதால் மணமகள் இன்ப அதிர்ச்சி அட்டைந்துள்ளார்.
மெரினா கடற்கரைக்கு அவ்வப்போது சென்று வரும் மு.க.ஸ்டாலின் அங்கு கடை வைத்திருப்பவர்களை சந்தித்து பேசுவதோடு, அவர்களது கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்வார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், மெரினாவில் பஜ்ஜிக் கடை நடத்தி வரும் அஜித்குமாரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர், வரும் 25ம் தேதி சாந்தோமில் எனது திருமணம் இருக்கிறது நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்று அழைத்துள்ளார். ஸ்டாலினும், அதற்கு உறுது அளித்துள்ளார்.
ஆனால், ஸ்டாலின் வருவாரா? மாட்டாரா? என்ற குழப்பத்தில் இருந்த அஜித்குமாருக்கு, ஸ்டாலின் திடீர் வருகை கொடுத்தது, அஜித்குமாரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், மணமகளுக்கு அது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரையும் வாழ்த்திய ஸ்டாலின் பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
