'முரசொலி' பவள விழா மேடையில் ரஜினிக்கு மரியாதை செய்த திமுக செயல் தலைவர்

முரசொலி பவள விழா வாழ்த்தரங்கத்தில் பங்கேற்ற நடிகர் ரஜினிக்கு திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் மரியாதையும், நினைவு பரிசும் வழங்கினார்.
இந்த விழா அழைப்பிதழில் தனது பெயர் இடம்பெற வேண்டாம் என ரஜினி கேட்டுக்கொண்டதால் அதை தவிர்த்திருந்தது திமுக. அதேநேரம், நடிகர் கமல் பெயர் அழைப்பிதழில் இடம் பெற்றிருந்தது. இரு நடிகர்களுமே விழாவுக்கு வந்திருந்தனர். ஆனால் கமல் மேடையிலும், ரஜினி முன்வரிசையிலும் அமர்ந்திருந்தார்.
இருப்பினும் விழாவின் நடுவே, ரஜினிகாந்த்தை மேடைக்கு அழைத்தார் ஸ்டாலின். மேடைக்கு வந்த அவருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசும் வழங்கினார் ஸ்டாலின். அப்போது மேடையிலிருந்த கமலையும் உடன் வருமாறு அழைத்து ரஜினிக்கு கவுரவம் செய்தார் ஸ்டாலின்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
