Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இனி வங்கி சேவைகள் வீடு தேடி வரும் ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

•On November 10, 2017
risarv
Share
risarv மூத்த குடிமக்கள் மற்றும் கண் பார்வை குறைபாடு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மாற்று திரனாளிகள் பணம் போடுதல், எடுத்தல் காசோலைகள் மற்றும் டி.டி..போன்ற அடிப்படை சேவைகளை அவர்களது வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும் என வங்கிகள் அறிவுறுத்துகின்றன . தற்போது உள்ள நிலவரப்படி வங்கிகளில் 70 வயதிற்கு மேர்ப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சரியான வங்கி சேவைகளை வழங்கப்படாமல் அவர்களை திருப்பி அனுப்புவதாக கிடைத்த புகார்களை தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம் என ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ள து. இந்த தரப்பினர்களில் சிலருக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதாலும், அவர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வது கடினம் என்பதாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு செமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் மாதந்தோரும் இலவசமாக 25 காசோலைகள் வழங்க வேண்டும் எனவும், அந்த காசோலைகள் மூலம் பணம் எடுக்கும் போது அவர்கள் நேரில் வரவேண்டும் என வங்கிகள் கட்டாயப்படுத்தக்கூடாது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அனைத்து தேவையான கோப்புகளும் சமர்பிக்கப்பட்டு தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்கு அந்த கணக்கு வைத்திருப்பவர்களின் பிறந்த தேதிப்படி தானாக மூத்த குடிமக்கள் கணக்காக மாற்றப்படும் வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எனவே இனி அதற்காக தனியாக கோரிக்கை கடிதம் எழுத வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் ஆண்டுதோறும் வரிச்சலுகைக்கான 15G/H வடிவங்களை அனைத்து வங்கிகளும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கணக்குதாரர்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.