முதல் முறையாக நல்லாசிரியர் விருது வழங்குகிறார் குடியரசுதலைவர்!

2017 ஆம் ஆண்டின் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருது செப்டம்பர்-5 ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.
ஆசிரியர் பணியைப் போற்றும் வகையில் மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கிக் கவுரவித்து வருகிறது. இந்த விருது, ரூ.50 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப்பதக்கம், பாராட்டுச்சான்று ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்நிலையில் இந்த ஆண்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்கள் உட்பட நாடு முழுவதும் 374 ஆசிரியர்களுக்கு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கவுள்ளார்.
நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர்களின் பெயர் பட்டியல்:
1.ஏ.எடித் தேவ தயாநிதி - சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி, சைதாப்பேட்டை, சென்னை.
2.சி.வாசுதேவராஜூ - பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப்பள்ளி, அத்திமஞ்சேரி, திருவள்ளூர்.
3.டி.திருமலைவாசன் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, கவந்தண்டலம், காஞ்சிபுரம்.
4.பி.என்.அன்பழகன் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, செம்பூர், திருவண்ணாமலை.
5. டி.ராமசாமி - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, பண்ணல், நாகப்பட்டினம்.
6. ஜெ.மேரி வினோதினி - எம்.டி. கிரேன் நடுநிலைப்பள்ளி, நேரு தெரு, விழுப்புரம்.
7.எஸ்.தங்கசாமி - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, பொன்பரப்பி, அரியலூர்.
8.எம்.ஜான் பீட்டர் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, சாணார்ப்பட்டி, திண்டுக்கல்.
9.எஸ்.வெங்கடாசலம் - பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி, செந்தாரப்பட்டி, சேலம்.
10.பி.வாசுகி - சிதம்பரம் நடுநிலைப்பள்ளி, பெரியவெண்மணி, பெரம்பலூர்.
11.ஆர்.தாமோதரன் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, செங்கமலநாச்சியார் புரம், சிவகாசி.
12.கே.நரசிம்மன் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, கெட்டுப்பட்டி, தர்மபுரி.
13.எஸ்.சுமதி - மெய்ப்பொருள் ஆரம்பப்பள்ளி, துர்காலயா சாலை, திருவாரூர்.
14.ஜி.விஜயராணி சுகிர்தாபாய் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, பட்டர்புரம், திருநெல்வேலி.
15.ஏ.வாசுகி - பி.யு.பி. பள்ளி, சலங்கபாளையம், ஈரோடு.
16.டி.பாஸ்கரன் - சி.எஸ்.ஐ. போர்டிங் நடுநிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை.
17.ஜி.ஜெ.மனோகர் - சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு, சென்னை.
18.ஆர்.சிவகுமார் - அரசு மேல்நிலைப்பள்ளி, கவரப்பட்டி, புதுக்கோட்டை.
19.பி.ஜெயச்சந்திரன் - அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, தல்லாக்குளம், மதுரை.
20.டி.சிவக்குமார் - நகராட்சி மேல்நிலைப் பள்ளி, எடையன்காட்டுவலசு, ஈரோடு.
21.ஆர்.பத்மநாபன் - ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, வைரிசெட்டிப்பாளையம், திருச்சி.
22. ஏ.மோகனன் - அரசு மேல்நிலைப் பள்ளி, அருமனை, கன்னியாகுமரி.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
