Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

முதல் முதாலாக சொந்த மண்ணில் வெற்றியை பதிவு செய்துவிட்டு வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர்!

•On November 2, 2017
india-kohli-rohit435
Share
 , india-kohli-rohit435 இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்று ஆரம்பித்துள்ளது. முதல் டி-20 போட்டி டெல்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிகவும் சிறப்பாக விளையாடினர். இதன்முலம் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு இந்தியா 202 ரன்கள் குவித்தது.  , நியூசிலாந்து பவுலர்களால் இந்திய தொடக்க ஜோடி ரோஹித், தவான் இணையின் அதிரடியை சமாளிக்க முடியவில்லை. சிக்ஸும், ஃபோரும் பறக்கவிட்டனர். அதிரடியாக விளையாடிய ரோஹித் 55 பந்துகளுக்கு 80 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தவான் 52 பந்துகளுக்கு 80 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஹர்திக் பாண்டியா டக் அவுட் ஆனார். கோஹ்லியும் அதிரடியாக 26 ரன்கள் எடுத்து இருந்தார். டோணி சிக்சருடன் 7 ரன்கள் எடுத்தார். 203 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறியது. இதன் காரணமாக 20 ஓவருக்கு 149 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து தோற்றது. bhu இந்திய அணியின் பவுலிங் தொடக்கமே முதலே சிறப்பாக இருந்தது புவனேஷ்வர் குமாரின் ஸ்விங்கை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி திணறியது. சாஹல் மிகவும் சிறப்பாக பந்து வீசினார். கடைசி போட்டியில் விளையாடிய நெஹ்ராவும் சிறப்பாக பந்து வீசினார். இந்த போட்டியில் சாஹல், பட்டேல் தலா 2 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார், பும்ரா, பாண்டியா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். ICC_18095 கடைசி போட்டி விளையாடிய நெஹ்ராவுக்கு டெல்லி வெற்றியோடு விடை கொடுத்தது. நியூசிக்கு எதிராக இந்தியா பெறும் முதலாவது டி20 வெற்றி இது என்பது சிறப்பு

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.