Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மீன்பிடி படகு மீது சரக்கு கப்பல் மோதல்: 3 மீனவர்கள் பலி...

•On June 11, 2017
saraku
Share
saraku கேரளாவில் மீன்பிடி படகு மீது சரக்கு கப்பல் மோதிய விபத்தில், 3 மீனவர்கள் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயமடைந்தனர். அங்குள்ள கொச்சி துறைமுகத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இங்கு வந்த பனாமா நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று, துறைமுகத்தில் இருந்து வெளியேறும்போது, எதிர்பாராவிதமாக, அங்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த படகு மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், மீனவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயமடைந்தனர். சம்பவத்திற்குக் காரணமான, அந்த சரக்கு கப்பல் உடனடியாக மாயமாகிவிட்டது. அதனை இந்திய கடலோர படையினர் உதவியுடன் கேரள போலீசார் தேடி, பறிமுதல் செய்துள்ளனர். சரக்குக் கப்பலின் கேப்டன், ஊழியர்கள் அனைவரையும் போலீசார் தங்களது பிடிக்குள் கொண்டுவந்துள்ளனர். இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இது கேரள கடல்பரப்பில் நடைபெறும் 2வது மோதல் சம்பவமாகும். ஏற்கனவே, 2012ம் ஆண்டு இத்தாலி கடற்படையினர், கேரள மீனவர்கள் 2 பேரை சுட்டுக் கொன்றதும் குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.