மீண்டும் ஒரு குழந்தைக்கு தாயானார் ஊர்வசி..!

காமெடி, குணச்சித்திரம் என இரண்டு ஏரியாவிலும் கலக்குபவர் நடிகை ஊர்வசி. 85-95களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த இவரும் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விவாகரத்தும் பெற்றனர்.
அதன்பின் ஊர்வசி இரண்டாவதாக தனது சகோதரரின் நண்பர் சிவன் என்பவரை திருமணம் செய்துகொண்டார் இந்த திருமணத்தையும் கூடதிருமணம் நடந்த சில மாதங்களுக்கு பின்பே மீடியாக்களுக்கு தெரியப்படுத்தினார் ஊர்வசி. தற்போது இவருக்கு சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்துள்ளது.
ஊர்வசிக்கு ஏற்கனவே முதல் கணவரின் மூலமாக ஒரு மகளும் இருக்கிறார்.. தவிர ஊர்வசியின் முன்னாள் கணவரான மனோஜ் கே.ஜெயன் ஏற்கனவே மறுமணம் செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
