மிரட்டலான லுக்கில் NGK போஸ்டர் : கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

மிரட்டலான லுக்கில் NGK போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்துக்கு தயார் படுத்தியுள்ளது. முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள NGK திரைப்படம் மே 31-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் என்ஜிகே. எஸ். ஆர் பிரபுவின் ட்ரீம் வாரிய பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த வருடமே வருவதாக இருந்தது. மேலும் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவி வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானதை தொடர்ந்து வரும் ஏப்ரல் 29-ம் தேதி மற்ற அனைத்து பாடல்களும் டிரைலரும் வெளியாக உள்ளது.
இதனை மீண்டும் நினைவுபடுத்தும் விதமாக இப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு சூர்யாவின் மிரட்டலான லுக்கில் போஸ்டர் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார்.
இதோ அந்த போஸ்டர் உங்கள் பார்வைக்காக:


Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
