Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மின்சார தட்டுப்பாடு குறைந்துள்ளது : மத்திய அரசு...

•On May 25, 2017
eb
Share
eb 2016 - 17 ம் ஆண்டில் நாட்டின் மின்சார தட்டுப்பாடு 0.7 சதவீதம் குறைந்துள்ளது என மத்திய மின்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் 3 ஆண்டு சாதனையை விளக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, 2013 - 14ம் ஆண்டில் 4.2 சதவீதமாக இருந்த மின்சார தட்டுப்பாடு, 2016 - 17 ல் 0.7 சதவீதமாக குறைந்துள்ளது. 2014 ல் மின் தட்டுப்பாடு 6103 மெகாவாட்டாக இருந்தது. 2017 ல் இது 2608 மெகாவாட்டாக குறைந்துள்ளது. அண்டை நாடுகளுக்கு மின்சார வழங்கும் அளவிற்கு இந்தியாவில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. 2016 - 17 ம் ஆண்டில் நேபாளம், வங்கதேசம், மியான்மர் ஆகிய நாடுகளுக்கு 6444 மில்லியன் யூனிட் மின்சாரத்தை இந்தியா விநியோகம் செய்துள்ளது.2014 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நாட்டின் மின் உற்பத்தி 33.3 சதவீதம் உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.