Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

“மார்ச்-31க்குள் கடனை செலுத்திவிடுவோம்” – மீடியா ஒன் நிறுவனம் உறுதி..!

•On December 30, 2014
Kochadaiiyaan-Reign-of-Arrows-750x420
Share

ரஜினியை வைத்து எண்பதுகளிலேயே ‘பிளட் ஸ்டோன்’ என்கிற ஆங்கிலப்படத்தை தயாரித்த நிறுவனம் தான் மீடியா ஒன் குளோபல் இன்போடைன்மென்ட் நிறுவனம். இந்த நிறுவனம்தான் ரஜினி நடித்து அவர் மகள் சௌந்தர்யா இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தையும் தயாரித்தது.

படத்தை தயாரித்த வகையில் மீடியா ஒன் நிறுவனம், எக்ஸிம் வங்கியில் இருந்து 22 கோடி ரூபாய் கடனாக பெற்றிருந்தது. அதை திருப்பி செலுத்த தவறியதால், அதற்கு பிணையாக லதா ரஜினி கொடுத்திருந்த சொத்துக்களின் மீது கிட்டத்தட்ட ஏல நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு சென்றது வங்கி..

ஆனால் இன்று மீடியாக்களை அழைத்த மீடியா ஒன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முரளி மனோகர், “வரும் மார்ச்-31க்குள் கடனை செலுத்திவிடுவோம்.. இதற்காக எங்களுக்கு பிணையாக தனது சொத்துக்களை அளித்த லதா ரஜினிக்கும் அவரது சொத்துகளுக்கும் எந்தவித இடையூறும் ஏற்படாதவண்ணம் நாங்கள் வங்கியுடன் பேசியுள்ளோம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

 ,

 ,

 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.