மாயாவிற்கு பிறகு இமைக்கா நொடிகள் படத்தில் தாயாக நடிக்கும் நயன்தாரா...

என்னதான் புதுப்புது நடிகையில் நம் தமிழ் சினிமா துறையில் வந்தாலும். தனக்கென ஒரு இடத்தை வைத்துள்ளார் நடிகை நயன்தாரா. அவரை லேடி சூப்பர்ஸ்டார் என்றும் கூறும் அளவுக்கு அவர் நடிப்பில் அசித்தியுள்ளார் என்பதை கூறியே ஆகவேண்டும்.
தற்பொழுது இவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் இமைக்கா நொடிகள் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். பாலிவுட் பிரபலம் அனுராக் காஷ்யாப் வில்லனாக நடிக்கிறார்.
இந்த படத்தில் 4 வயது குழந்தைக்கு நயன்தாரா அம்மாவாக நடிக்கிறார். த்ரில்லர் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. கேமியோ பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். 'ஹிப் ஹாப் தமிழா' இசையமைத்து வருகிறார்.
படத்தின் வேலைகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
