மாநாட்டில் இணையும் இசையமைப்பாளர் யுவன்..!

சரியான கதைத் தேர்வு, நேரத்திற்கு படப்பிடிப்பில் கலந்துகொள்வது என தெம்பாக களமிறங்கியுள்ளார் சிம்பு. அடுத்தடுத்த கமிட்மெண்ட்ஸ் என பரபரப்பாக தனது கேரியரை சுழலவிட்டிருக்கும் சிம்புவின் அதிரி புதிரியான கூட்டணி வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் தான் மாநாடு.
இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன் நடிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரபல இசையமைப்பாளரான யுவன்சங்கர் ராஜா தற்போது மாநாடு படக்குழுவினருடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா இசையமைக்கவுள்ளதாக இயக்குனர் வெங்கட் பிரபு அதிகார பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
