மலேசியாவில் மட்டும் 140 தியேட்டர்கள் - அதிர வைக்கும் 2 பாயிண்ட் ஓ ரிலீஸ்..!

2 பாயிண்ட் ஓ படத்தின் ரிலீஸ் மலேசியாவையே அதிர வைக்க உள்ளது, ஆம், மலேசியாவில் மட்டும் இப்படம் எத்தனை தியேட்டர்களில் வெளியாக உள்ளது என்ற லிஸ்ட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர்களை வைத்து 2 பாயிண்ட் ஓ படத்தை இயக்கி உள்ளார்.
லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் மிக மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தற்போது மலேசியாவில் மட்டுமே இப்படம் 140 தியேட்டர்களில் வெளியாக இருப்பதாகவும் அவை எந்தெந்த தியேட்டர் என்ற விவரமும் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருந்த கபாலி படம் மலேசியாவில் 130 தியேட்டர்களில் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
