“மற்றவர்களுக்கு மூன்று... எனக்கு ஒன்று” – பாலாவின் 2015 கணக்கு

இயக்குனர் பாலா தயாரிப்பில் மிஸ்கின் இயக்கிவரும் படம் தான் பிசாசு.. இந்தப்படத்தில் நாகா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக நடிக்கிறார் கேரளாவை சேர்ந்த பிரயாகா. ரவிராய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு அருள் குரோலி என்னும் புதிய இளைஞர் இசையமைத்துள்ளார். தமிழச்சி தங்கபாண்டியன் பாடல் ஒன்றை எழுதி பாடலாசிரியராக அறிமுகமாகிறார்.
இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காட்டினார்கள் பாலாவும் மிஸ்கினும்.. இந்தப்படம் பற்றி மிஸ்கின் சொல்லும்போது, “பேய், பிசாசு பற்றி பல படங்கள் வந்திருந்தாலும் இதில் பிசாசுவை எனது பார்வையில் காட்டியுள்ளேன்.. நான் தடுக்கி விழ இருந்த சமயத்தில் என்னை தாங்கிப்பிடித்த பாலாவுக்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன்” என நெகிழ்ந்தார்.
அதன்பிறகு பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து பாலா பேசும்போது, “இனிமேல் அடுத்த வருடத்தில் இருந்து, வருடத்திற்கு மூன்று படங்கள் தயாரிப்பேன்.. அவர் புதுமுகமா, ஏற்கனவே படம் இயக்கியவரா என்பதை இப்போதே சொல்லமுடியாது. ஆனால் திறமையானவருக்குத்தான் வாய்ப்பு என்பதில் சந்தேகம் வேண்டாம்.. அதேபோல நானும் வருடத்திற்கு ஒரு படம் இயக்குவது என முடிவு செய்திருக்கிறேன்” என்றார். பாலாவின் முடிவை கைதட்டி வரவேற்போமே..
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
