Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மயில்சாமிக்கு சத்யராஜ் விட்ட சவால்..!

•On November 11, 2014
IMG_9498
Share

சத்யராஜை எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதைவிட எம்.ஜி.ஆர் பக்தர் என சொல்வதுதான் சரியாக இருக்கும்.. அந்த அளவுக்கு அவருக்கு எல்லாமே எம்.ஜி.ஆர்தான். ஆனால் அவரே இன்னொரு எம்.ஜி.ஆர் ரசிகரான மயில்சாமியை பார்த்து பொறாமைப்பட்டு சவால்விடுகிற அளவுக்கு போய்விட்டார் என்றால்..?

உடனே சீரியஸாக எதுவும் நினைத்து விடாதீர்கள்.. ஜாலியான மேட்டர் தான்.. இன்று நடைபெற்ற ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், படத்தில் நடித்திருக்கும் மயில்சாமியும் கலந்துகொண்டார். முதலில் பேசிய மயில்சாமி சத்யராஜின் வள்ளல் தன்மைகளை பற்றி புகழ்ந்து பேசினார்.

இறுதியாக பேசிய சத்யராஜ், “நான் எப்போதுமே என்னைவிட நன்றாக நடிக்கிற நடிகர்கள் மீது பொறாமைப்படமாட்டேன்.. என்னை விட நன்றாக சண்டைபோடுபவர்களை பார்த்தும் பொறாமைப்படமாட்டேன். ஆனால் எம்.ஜி.ஆர் ரசிகராக இருப்பதில் என்னை ஒருத்தர்கூட மிஞ்சிவிடக்கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருப்பேன்.

ஆனால் கடந்த பல வருடங்களாக இதில் மட்டும் நம்ம மயில்சாமி எனக்கு கடும் போட்டியாகவே இருந்து வருகிறார். அதிலும் சமீபத்தில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ பட வெள்ளிவிழா கொண்டாட்டத்தில் மயில்சாமி இறங்கி அட்டகாசம் பண்ணிவிட்டார். பாருங்கள்.. அடுத்து தலைவரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ வெளியாக இருக்கிறது. அதன் வெற்றிக்கொண்டாட்டத்தில் மயில்சாமியை முந்துவேன்” என ஜாலியாக சவால் விட்டார் சத்யராஜ்.. மயில்சாமியும் மகிழ்ச்சியுடன் அந்த சவாலை ஏற்றுக்கொண்டார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.