மன்னார் வளைகுடாவில் காற்றழுத்த தாழ்வுநிலை- சென்னையில் மிதமான மழை!

தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யும். தென்மேற்கு வங்கக்கடலில் மன்னார் வளைகுடா வடகடலோரம் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுகிறது. தமிழக மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
