Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

‘மன்னன்’ ஸ்டைலில் சிவகார்த்திகேயன்!!!..

•On March 14, 2017
siva
Share
siva 'மன்னன்' படத்தில் ரஜினி நடித்த ஸ்டைலில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது. சிகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா நடிப்பில் ‘வேலைக்காரன்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மலையாள நடிகர் பஹத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், தம்பி ராமையா, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் தலைப்புக்கேற்றவாறு படத்தில் சிவகார்த்திகேயன் மில்லில் வேலை செய்யும் தொழிலாளியாக நடிக்கிறாராம். தனது ஒவ்வொரு படங்களிலும் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் சிவகார்த்திகேயன், இந்த படத்திலும் ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘மன்னன்’ படத்தில் ரஜினி நடித்த மில் தொழிலாளி வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. படத்தில் முக்கால் வாசி நேரம் காக்கி பேண்ட், காக்கி சட்டை அணிந்துதான் நடிக்கிறாராம் சிவகார்த்திகேயன். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பான பெயர் பெற்று தரும் என்று அனைவராலும் எதிர்ப்பார்க்கபடுகிறது. இப்படத்தை ரஜினி ரசிகர்களும் பெரிதும் எதிர்ப்பார்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.