Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மனைவி ரஜினியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால்..!

•On November 13, 2018
Vishnu_Vishal_20170425020444-263x350
Share
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஷ்ணு விஷால் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் என வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த ராட்சசன் படம் மெகா ஹிட்டாகி இருந்தது. இந்நிலையில் தற்போது விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தன்னுடைய மனைவி ரஜினியை தான் விவாகரத்து செய்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் எங்களுக்கு ஒரு மகன் உள்ளான். அவனை இருவரும் நன்றாக பார்த்து கொள்வோம். தொடர்ந்து நல்ல நண்பர்களாக இருப்போம். இருவரும் சேர்ந்து வாழ்ந்த காலங்கள் மறக்க முடியாதது என கூறியுள்ளார். மேலும் எங்களது தனிப்பட்ட வாழ்க்கையையும் மதியுங்கள் என வேண்டுகோள் வைத்து அந்த அறிக்கையை முடித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.