Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸை வீழ்த்திய தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்

•On August 14, 2017
tnpl
Share
tnpl டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 26-வது ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸை வீழ்த்தியது. தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 26-வது ஆட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 196 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக எஸ்.பி.நாதன் 77 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் ஆடிய மதுரை அணி 8.5 ஓவர்களில் 59 ஓட்டங்களுக்கு மொத்தமாகச் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் அருண் கார்த்திக் 23 ஓட்டங்கள் எடுத்தார். தூத்துக்குடி தரப்பில் கணேஷ் மூர்த்தி மூன்று விக்கெட்டுகளையும், ஆஷிக் சீனிவாஸ் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இந்தப் போட்டியில் மதுரை அணியை வீழ்த்தியதன்மூலம் தூத்துக்குடிக்கு கிடைத்த 7-வது வெற்றியாகும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.