பெண் சிங்கக் குட்டிக்கு "ஜெயா" என பெயர் சூட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

வண்டலூர் பூங்காவில் உள்ள 6 மாத பெண் சிங்கக்குட்டிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயா என பெயர் சூட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில், பிறந்து 6 மாதமான சிங்கக்குட்டிக்கு பெயர் சூட்டும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
நிலா என்ற பெண் சிங்கத்திற்கும், சிவா என்ற ஆண் சிங்கத்திற்கும் 6 மாத பெண் சிங்கக் குட்டி உள்ளது. ஜெயலலிதாவின் தீவிர பக்தரான எடப்பாடி பழனிசாமி, பெயர் சூட்டும் விழாவில், அந்த பெண் சிங்கக்குட்டிக்கு ஜெயா என பெயர் சூட்டினார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
