Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பெண்மையை போற்றிய கூகுள்

•On March 8, 2017
womans
Share
womans சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களை கவுரவிக்கும் விதமாக டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது கூகுள். கூகுள் வெளியிட்டுள்ள டூடுலில், பாட்டி ஒருவர் தனது பேத்திக்கு மறக்க முடியாத 13 பெண்களை பற்றிய கதைகளை கூறுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்லைட் ஷோ வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த டூடுல் 13 பெண்களை பற்றிய கதைகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.கூகுள் கவுரவித்துள்ள பெண்களின் பட்டியலில் அமெரிக்க பத்திரிக்கையாளரும், சமூக ஆர்வலருமான இடா வெல்ஸ், மெக்சிகோ ஓவியர் பிரிடா கஹ்லோ, இத்தாலி - பிரேசிலைச் சேர்ந்த கட்டுமானத்துறை நிபுணரான லினா போ பரடி உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவராக இந்தியாவைச் சேர்ந்த நாட்டிய கலைஞரும், நடன ஆசிரியருமான ருக்மணி தேவியும் இடம்பெற்றுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.