புலிமுருகன் தமிழ் இசை வெளியீடு...

பாடல்கள் - சினேகன், ஆர்.பி.பாலா - ஒளிப்பதிவு, ஷாஜிகுமார்
இசை - கோபிசுந்தர், எடிட்டிங் - ஜான், ஸ்டன்ட் - பீட்டர் ஹெய்ன், கதை, திரைக்கதை - உதயகிருஷ்ணா.
இந்த பிரமாதமான படத்தை இயக்கி இருப்பவர் - வைஷாக், தயாரிப்பு - டோமிச்சன் முலக்குப்பாடம்.
முலக்குபாடம் பிலிம்ஸ் சார்பில் டோமிச்சன் முலக்குபாடம் தயாரித்து வைசாக் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் புலிமுருகன். இப்படத்தில் மோகன்லால், கமாலினி முகர்ஜி, ஜெகபதிபாபு, லால், கிஷோர், மற்றும் நமிதா நடித்திருந்தனர்.ஆக்ஷன் மற்றும் அட்வென்சர் படமாக புலிமுருகன் படம் உருவாகி இருக்கிறது.
மேலும் இப்படம் மலையாள திரையுலகில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வெளியிடப்பட்டு 150 கோடி வசூல் சாதனை செய்த படமாகும் "புலிமுருகன்". மோகன்லாலின் சினிமா வாழ்க்கைக்கு கிரீடமான புலிமுருகன் அதே பெயரில் தமிழில் 3D தொழில் நுட்பத்தில் உருவாக்கப்படுகிறது.
மலையாளத்தில் புலிமுருகனை தயாரித்த பிரபல பட நிறுவனமான முலக்குபாடம் பிலிம்ஸ் சார்பில் டோமிச்சன் முலக்குபாடம் புலிமுருகன் படத்தை தமிழிலும் உருவாக்குகிறார்.
இந்த படத்திற்கு வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருப்பவர் ஆர்.பி.பாலா. ஒரு மிருகத்தை வைத்து படப்பிடிப்பு நடத்துவது என்பது சிரமமான காரியம். ஆனால் புலியை வைத்து பல ரிஸ்க்கான காட்சிகளை இந்த படத்தில் எடுத்தது மிகப்பெரிய சிரமம். ஏன் என்றால் விலங்குகளுக்கு எப்போது கோபம் வரும் என்ன செய்யும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படி நிறைய விஷயங்கள் இந்த படத்தில் நடந்தது. இதில் நடித்த நடிகர்கள் வேலை செய்த தொழில்நுட் கலைஞர்கள் அனைவரும் மிகவும் சிரமம்ப் பட்டனர். அந்த பிரமாண்டத்தை பார்த்த மலையாள ரசிகர்கள் "புலிமுருகனை" கொண்டாடினார்கள்.
இப்போது புலிமுருகன் படம் தமிழ் ரசிகர்களுக்காக 3D தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ளது. மலையாள ரசிகர்களுக்காகவும் 3D தொழில்நுட்பமாக்கப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது. இந்த மலையாள 3D படம் சமீபத்தில் சிறப்பு காட்சியாக திரையிடப் பட்டது. ஒரே காட்சியில் 25000 ம் பேர் பார்த்து அது "கின்னஸ்" சாதனையாக பதிவிடப்பட்டது.
மேலும் இப்படத்தின் தமிழ் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரமாண்ட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமன், நடிகர் நடராஜ், இயக்குனர் சக்தி சிதம்பரம், நடிகர் ஹரிக்குமார், ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், டப்பிங் ஆர்ட்ஸ்ட் சங்க தலைவர் செல்வராஜ், புலிமுருகன் படத்தின் தயாரிப்பாளர் டோமிச்சன் முலக்குப்பாடம், தமிழாக்கத்தில் பாடல்களை எழுதிய சினேகன் மற்றும் இப்படத்தில் பணியாற்றிய டப்பிங் ஆர்ட்டிஸ்ட், தமிழில் வசனங்களை எழுதியுள்ள ஆர்.பி.பாலா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். படத்தின் இசை தகட்டினை கே.டி.குஞ்சுமன் வெளியிட கேமராமேன் &, நடிகர் நடராஜ் பெற்றுக்கொண்டார்.
இந்த படத்தை தமிழகமெங்கும் செந்தூர் சினிமாஸ் பட நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஜூன் 26 முதல் உலகமெங்கும் "தொண்டன்"...
