Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

புதுச்சேரியில் மாட்டு இறைச்சிக்கு தடையில்லை: முதல்வர் அறிவிப்பு...

•On May 29, 2017
narayanasamy
Share
narayanasamy நமது புதுவை மாநிலத்தின் கலாச்சாரம் பிரெஞ்சு நாடினர் கலாச்சாரத்தை கொண்டது.இங்கு பெரும்பாலான மக்கள் மாட்டு இறைச்சி சாப்பிடுகிறார்கள். குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் விரும்பி சாப்பிடும் உணவாக மாட்டு இறைச்சி உள்ளது. மேலும் தோல் தொழிலிலும் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசின் தடை சட்டத்தை நிச்சயம் அமல்படுத்த மாட்டோம். இந்த சட்டத்துக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் கர்நாடகா, கேரளா மாநிலங்கள் இந்த சட்டத்தை எங்கள் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித் துள்ளன. அதே போல் புதுவையிலும் மத்திய அரசு தன்னிச்சையாக கொண்டு வந்த இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம். தேவைப்பட்டால் புதுவையில் மாட்டு இறைச்சி விற்பனையை தொடர தனிச்சட்டம் கொண்டு வந்து பாதுகாப்பு அளிக்கப்படும். இது சம்பந்தமாக பிரதமருக்கு நான் இன்றே கடிதம் அனுப்ப இருக்கிறேன். இவ்வாறு நாராயணசாமி

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.