புதிய ரூ.200 நோட்டு விரைவில் அறிமுகம்...

மத்திய அரசு விரைவில் புதிய, 200 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்ய உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு கடந்த ஆண்டு நவ.,8 ம் தேதி, ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெற்றது. இதன் தொடர்ச்சியாக புதிய, ரூ.500, ரூ.2,000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. இந்த சூழ்நிலையில், புதிய ரூ.200 நோட்டை அறிமுகப்படுத்த, ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிசர்வ் வங்கியின் தலைமை குழு இதற்கான ஒப்புதலை கடந்த மார்ச் மாதம் அளித்துள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகு, புதிய ரூ.200 நோட்டுகளை அச்சடிக்கும் பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஇயக்குனராக களமிறங்கும் கன்னட நடிகை...
Next Postஎம்எல்ஏ மகளை வெட்டிய இளைஞர் கைது....
