புதிதாய் ஒரு ஆச்சர்ய கூட்டணி

சேரன் தேசியவிருதுகள் குவித்த இயக்குநர். குடும்பங்கள் கொண்டாடும் படங்களை எடுத்தவர். மென்மை உணர்வுகளை படம்பிடித்த இயக்குநர்.
தமிழ் சினிமா அழிவுப்பாதையில் செல்லக்கூடாது என திருட்டு வீசீடிக்கு எதிராக தனியாக போராடி c2h ஆரம்பித்தார். அவரது கெட்ட நேரம் அங்கே ஆரம்பித்தது. அதன் பிறகு அவரால் படங்கள் இயக்க முடியவில்லை. திருட்டு வீசீடிக்கு எதிராக குரல் கொடுக்கும் நாயகர்கள் யாரும் அவரை ஆதரிக்கவில்லை. அவருக்கு கால்ஷீட்டும் கொடுக்கவில்லை.
சில வருடங்களாக முடங்கி இருந்த சேரன் இப்போது ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். விஜய் சேதுபதி தான் சேரனை அழைத்து கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
பெரிய ஹீரோக்கள் செய்யத் தயங்கும் ரோல்களை மிகத் துணிச்சலாக செய்யும் விஜய் சேதுபதி, நல்ல இயக்குநர்களை தேடி படம் செய்வதிலும், அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதிலும் அடுத்தவர்களுக்கு முன் மாதிரியாக இருக்கிறார்.
இந்த படத்தின் சாத்தியங்களுக்கு இயக்குநர் அமீர் தான் காரணமாக இருந்திருக்கிறார். இந்த இருவரையும் அவர் தான் சந்திக்க வைத்திருக்கிறார்.
சேரன் படங்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இப்போது விஜய் சேதுபதி கூட்டணி மிகச்சிறந்த படத்தை தரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
