பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்!.. ஒருவர் பலி.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஒருவர் பலியானதாகவும் சுமார் 50 பேர் காயம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.அங்கு மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஒருவர் பலியானதாகவும் சுமார் 50 பேர் காயம் அடைந்ததாகவும் அங்கிருந்து முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள மிண்டானாவோ தீவு கூட்டம் பகுதியில் இன்று சரியாக காலை 6 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 6.9 அலகுகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக அடுத்தடுத்து நில அதிர்வுகளும் உணரப்பட்டது.
அந்நாட்டில் சுரிகாவ் என்னும் நகரத்தில் உள்ள பல வீடுகள், கடைகள் மற்றும் பிரதான சாலைகள் இந்த நிலநடுக்கத்தால் சேதம் அடைந்தன. இந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு ஒரு பெண் பலியாகியுள்ளார். சுமார் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.ஏராளமான சொத்துகளுக்கு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. மக்களும் தமது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postவிரைவில் வரவிருக்கும் அதிவேக ரயில்கள்.
