பிரபாஸ் நடிக்கும் 21வது திரைப்படம்!

தெலுங்கு திரையுலகில் சற்று நன்கு அறிந்த நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். 2002ம் ஆண்டு ஈஸ்வர் என்னும் திரைப்படம் மூலமாக தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை பிரபாஸ் கதாநாயகனாக நடித்து 19 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
2011ம் ஆண்டு வெளிவந்த 'ரெபெல்' தெலுங்கு திரைப்படத்திற்காக பிரபாஸ் மெனக்கெட்டு உடற்பயிற்சி செய்து தன்னை ஒரு ஆக்ஷ்ன் ஹீரோவுக்கான உடற்கட்டுடன் தன்னை மெருகேற்றிக் கொண்டார். இந்த படத்துக்கு பிறகு மிர்ச்சி, பாகுபலி, பாகுபலி 2, சாஹோ என தொடர்ந்து ஆக்ஷ்ன் படங்களில் நடித்து வந்தார்.
தற்போது பிரபாஸ் நடித்துவரும் 20வது திரைப்படம் 'ஜான்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இத்திரைப்படத்தை ராதா கிருஷ்ணா குமார் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு 2015ம் ஆண்டில் கோபிசந்த் நடித்த 'ஜில்' திரைப்படம் மூலமாக இயக்குநராக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.
பிரபாஸ் நடித்து வரும் 20வது திரைப்படமும் ஒரு ஆக்ஷ்ன் திரைப்படம் என சொல்லப்படுகிறது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுக்க பரவிவருவதால், இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்த நிலையில் மீதி படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது வந்த தகவல் என்னவென்றால், பிரபாஸ் நடிக்கும் 21வது திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கவுள்ளார். 2015ல் நாணி நடித்து தெலுங்கில் வெளிவந்த 'எவடே சுப்ரமண்யம்' திரைப்படம் மூலமாக நாக் அஸ்வின் இயக்குநராக அறிமுகமானார். பின்னர் 2018ல் கீர்த்தி சுரேஷ் நடித்து தேசிய விருது பெற்ற 'மஹாநதி' என்னும் தெலுங்கு திரைப்படத்தை இயக்கினார். இந்த 'மஹாநதி' தமிழில் 'மகாநடிகை' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தன்னுடைய மூன்றாவது திரைப்படமாக பிரபாஸை கதாநாயகனாக வைத்து இயக்கவிருக்கிறார் நாக் அஸ்வின். நாக் அஸ்வின் இயக்கவிருக்கும் இத்திரைப்படம் பிரபாஸின் 21வது திரைப்படமாகும். இத்திரைப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தயாரிக்கப்பட்டு பல உலக மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகக்கூடிய ஒரு பிரம்மாண்ட திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் சொல்கின்றன.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
