Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பிரபல பாடகியிடம் திருடர்கள் கை வரிசை...

•On May 11, 2017
chinmayi
Share
chinmayi பிரபல பாடகியில் ஒருவரான பாடகி சின்மயி இவரின் குரலுக்கு என்று ரசிகர்கள் இருக்கிறார்கள். அவ்ளோ அழகிய குரலுக்கு சொந்தக்காரர் சின்மயி. இவர் ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி தனது கருத்தை பதிவு செய்வார் ஆனால் தான் சுச்சி விஷயத்தில் தலையிட்டு கொண்டதில் இருந்து. அவர் கருத்தை பதிவிடுவதை குறைத்து கொண்டார். இந்நிலையில் அண்மையில் தனது பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதாவது என்னவென்றால் தான் அமெரிக்கா சென்றிருந்தபோது தன்னிடம் திருடர்கள் கைவரிசை காட்டி விட்டதாக ஒரு டுவிட் வெளியிட்டுள்ளார் சின்மயி. அதில் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிக்கோ நகருக்கு ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். ஆனால் நிகழ்ச்சி முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த எனது கார் சேதமடைந்திருந்தது. காருக்குள் இருந்த பொருட்களும் திருட்டு போயிருந்தது. அதையடுத்து போலீசில் புகார் அளித்தேன். அப்போதுதான் சான்பிரான்சிகோவில் திருட்டு நடப்பது சகஜமான விசயம் என்பது எனக்கு தெரியவந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.