Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பிரதமர் வாழ்த்திய தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி...

•On May 22, 2017
vaishali
Share
vaishali சீனாவின் செங்டு நகரில் நடைபெற்ற ஆசிய பிளிட்ஸ் செஸ் போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் வைஷாலி தங்கப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் 9 சுற்றுகளில் விளையாடிய தமிழகத்தின் வைஷாலி 7 வெற்றி, 2 டிராவுடன் 8 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் ஆனார். மற்றொரு இந்திய வீராங்கனையான பத்மினி 7 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தைப் பிடித்தார். ஆடவர் பிரிவில் தமிழக வீரரான அரவிந்த் சிதம்பரம் 7 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தைப் பிடித்தார். இதையடுத்து இந்தியப் பிரதமர் மோடி, ட்விட்டர் பக்கத்தில் வைஷாலிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். வைஷாலியின் சாதனைக்கு நாடு பெருமைப்படுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.