பிப்ரவரியில் வெளியாகும் 'பாம்பு சட்டை'

பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஆடம்தாசன் இயக்கியுள்ள படம் 'பாம்பு சட்டை'. இப்படத்தை மனோபாலா தயாரித்துள்ளார். இப்படத்தில் பாபி சிம்ஹா நிர்வாணமாக நடித்த காட்சிகளை நீக்கிய பிறகு தான் தணிக்கையில் யு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இப்படத்தை வருகிற 26ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தனர். ஆனால் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் 'எஸ் 3' அந்த நாளில் வெளியாவதால், 'பாம்பு சட்டை' படத்தை பிப்ரவரி 2ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
